| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
181005b ii d00 0 tam d |
| 040 |
: |
_ _
|a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 |
: |
_ _ |a புராண ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 |
: |
_ _ |a சுவரோவியம் |
| 500 |
: |
_ _ |a
| புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோயில் வட்டத்தில் ஆத்மநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் மாணிக்கவாசகரால் திருவாசகம் இங்கு தான் இயற்றப்பட்டது. அது போல கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊராகும். சிவன் கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக இக்கோயிலில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சாட்சர மண்டபத்தில் கிடைத்த செய்யுள் கல்வெட்டுகளில் மாணிக்கவாசகர் கோயில் கருவறையையும், கனகசபை மண்டபத்தையும் எழுப்பினார் என கூறப்பட்டுள்ளது. “திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறு நான்கு உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப் பதிக்கும் கனக சபை மண்ட பந்தனிற் பாக்கலெலாம் மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!“ மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். இக்கோயிலில் கனகசபை, சிற்சபை, தேவசபை, நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டபங்கள் உள்ளன. இதன் கூரைப் பகுதியில் ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான ஓவியங்கள் கால ஓட்டத்தில் சேதாரமாகி மங்கிய நிலையிலேயே உள்ளன. இவ்வோவியங்களில் திருஞான சம்பந்தர் மதுரை சென்று, சமணர்களோடு வாதிட்டு, பின் கழுமரம் ஏற்றிய சம்பவங்கள் வரை ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும் வரையப்பட்டு அதற்கு உரிய விளக்கங்களுடன் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் வரைந்த முறை மற்றும் பயன்படுத்திய வண்ணங்களின் அடிப்படையில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் ஆட்சியில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அது போல மற்றொரு மண்டபத்தில் மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்று, சிவபெருமானுக்கு திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயில் கட்டிய நிகழ்வுகளும், அதன் பின் நரிகள் பரிகளான நிகழ்வுகளும் தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சிக்கும் கீழே அதற்குரிய விளக்கங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. |
|
| 510 |
: |
_ _ |a
- ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015.
- முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
- Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943.
- Sewell, R.J. A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961,
- Sivaramamurti, C. South Indian Paintings (New Delhi, National Museum, 1968),
- Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943.
- Krishnaswami, A. The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
- Natarajan B. The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
- Ramachandran. T.M. Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
- Sastri, K.A. Nilakanta, A History of South India (Madras, Oxford University Press, 1971).
- Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
|
| 653 |
: |
_ _ |a சுவரோவியம், புதுக்கோட்டை, மராத்தியர், நாயக்கர், சமணர், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருவிளையாடல், தமிழ்நாடு, ஆவுடையார்கோயில், ஆத்மநாதர் கோயில் |
| 700 |
: |
_ _ |a க.த.காந்திராஜன் |
| 710 |
: |
_ _ |a க.த. காந்திராஜன் |
| 752 |
: |
_ _ |a ஆத்மநாதசுவாமி கோயில் |b # |c ஆவுடையார் கோயில் |d புதுக்கோட்டை |f ஆவுடையார் கோயில் |
| 850 |
: |
_ _ |a க.த. காந்திராஜன் |
| 914 |
: |
_ _ |a 10.1791775 |
| 915 |
: |
_ _ |a 79.1235634 |
| 995 |
: |
_ _ |a TVA_PNT_00053 |
| barcode |
: |
TVA_PNT_00053 |
| book category |
: |
சுவரோவியங்கள் |
| cover |
: |
|
| Primary File |
: |
Jain imaplement - full.jpg
மாணிக்கவாசகருக்கு பெயர் சூட்டல்.jpg
பாண்டியன் அரண்மனையில் சாரணர்கள்.jpg
அரண்மனையில் நோயுற்ற மன்னனும் அரசியும்.jpg
சமணர் சம்பந்தர் வாதம் புரிவது.jpg
சமணர்களோடு சம்பந்தர் வாதம் புரிவது.jpg
சமணர்கள் பாண்டிய மன்னனை குணப்படுத்த முயற்சித்தல்.jpg
சமணர்கள் பாண்டிய மன்னனோடு பேசிக்கொண்டிருத்தல்.jpg
சம்பந்தரை அரசி மங்கையற்கரசி வணங்குதல்.jpg
சம்பந்தர் குடிலில் அக்னி தீ வைத்தல்.jpg
சம்பந்தர் பல்லக்கில் வருதல்.jpg
திருஞான சம்பந்தரை மங்கையற்கரசி வணங்குதல்.jpg
திருஞான சம்பந்தர் சொக்கநாதனை வழிபடுதல்.jpg
தீ முன் சமணர்களும் அக்கினி பகவானும் .jpg
பாண்டிய மன்னனை சமணரும், சம்பந்தரும் குணப்படுத்த முயலுதல்.jpg
மன்னரும் சம்பந்தரும் பேசிக் கொண்டிருப்பது.jpg
கழுவேற்றம் மற்றும் செக்கில் ஆட்டுதல்.jpg
தாரூக வன முனிவர்கள் சிவனை அழிக்க யாகம் வளர்ப்பது - கஜசம்காரமூர்த்தி.jpg
மாணிக்க வாசகர் பாண்டிய மன்னனை வணங்குதல்.jpg
மாணிக்கவாசகருக்கு அரிமர்த்தனபாண்டியன் முத்திரை மோதிரம் வழங்குவது .jpg
மாணிக்கவாசகருக்கு ஆசி வழங்குதல்.jpg
மாணிக்கவாசகருக்கு மன்னன் முத்து மோதிரம் வழங்குதல்.jpg
மாணிக்கவாசகர் குதிரை வாங்க செல்வது.jpg
மாணிக்கவாசகர் சமண மதத்தைச் சேர்ந்த மன்னனோடு போரிடுவது.jpg
மாணிக்கவாசகர் சிறுவர்களுக்கு ஞானம் போதிப்பது.jpg
மாணிக்கவாசகர் பிற இடங்களில் சிவ மதத்தை பரப்பி பின் காணிக்கையுடன் மதுரை வருதல்.jpg
மாணிக்கவாசகர் விகடராஜனுக்கு மகுடம் சூட்டுவது.jpg
மாணீக்கவாசகர் பிற மன்னர்களை சந்திப்பது.jpg
மாண்க்கவாசகர் கோயில் கட்டுவது.jpg
அரசனும் அரசியும் அரண்மனையில்.jpg
|